செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (10:45 IST)

குட்கா பிரச்சினை; சபாநாயகர் அளித்த நோட்டீஸ் மீண்டும் ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

சட்டபேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்ததாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது அனுப்பப்பட்ட நோட்டீஸை மீண்டும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் குட்கா பொருட்களை எடுத்து சென்றது முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து சபாநாயகர் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன என்பதை எடுத்துரைக்கதான் எடுத்து சென்றதாக திமுக வாதிட்டது.

இந்த வழக்கில் கடந்த சில மாதம் முன்னதாக விசாரித்த சென்னை நீதிமன்றம் சபாநாயகரின் நோட்டீஸை ரத்து செய்ததுடன் விரிவான புதிய நோட்டீஸ் பிறப்பிக்கலாம் என அனுமதி வழங்கியது. அவ்வாறாக பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நோட்டீஸையும் இன்றைய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.