செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (07:39 IST)

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்: தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னை வருகை!

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் செய்வதற்கு தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சட்டமன்றத்தின் காலம் முடிவடையவுள்ளதை அடுத்து அதற்கு முன்னரே தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது.
 
இதனை அடுத்து ஏப்ரல் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் டெல்லியிலிருந்து சென்னை வருகின்றனர்.
 
சென்னை வரும் தேர்தல் அதிகாரிகள் தமிழக தேர்தல் அதிகாரிகளுடனும் அரசியல் கட்சி பிரமுகர்களுடனும் ஆலோசனை செய்து அதன் பின்னர் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.