வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (15:02 IST)

நோபல் பரிசு வென்ற ’அபிஜித் ’ திகார் சிறையில் இருந்தவர்... வைரல் தகவல் !

உலகில் உள்ள 6 முக்கியத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வறுமையை  ஒழிக்க வேண்டி பல முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக  அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்ளே, மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நோபல் பரிசு பெரும் இந்த மூன்று பேரில் அபிஜித் பானர்ஜி என்பவர் இந்தியாவில் பிறந்தவர். மேலும் இவர் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஜித் பானர்ஜிக்கு பரிசுத் தொகையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு கிடைக்குமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித்துக்கு இவ்வாண்டுக்கான பொருளதாதரத்துக்கான நோபல்  பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரைக் குறித்து ஒரு தகவல் இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
 
அதில், 1961 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி. இவர் தற்போது அமெரிக்காவில் கேம்பிரிட்ஸ் நகரில் உள்ள மாசாசூட்ஸ் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிலையத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  
 
கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யூ ( JNU) பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பி.என் ஸ்ரீவத்சவாவின் இல்லத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில், சுமார் 400 மாணவர்களுடன் அபிஜித்தும்  கலந்து கொண்டார். அங்கு வந்த போலீஸார் மாணவர்களை திகார் சிறையில் அடைத்தனர். அதில் அபிஜித்தும் 10 நாட்கள் திகார் சிறையில் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் சிறைவாசம் பெற்ற ஒருவர் நோபல் பரிசு பெருவது இதுவே முதல்முறை. அதிலும் அவர் இந்தியர் என்பது இன்னொரு ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது. 
 
அபிஜித்துடன்,அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் பொருளாதாரத்துக்கான நோபல் பைரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.