திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (15:44 IST)

2019 - ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு !

உலகில் உள்ள 6 முக்கியத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வறுமையை  ஒழிக்க வேண்டி பல முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக  அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்ளே, மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நோபல் பரிசு பெரும் இந்த மூன்று பேரில் அபிஜித் பானர்ஜி என்பவர் இந்தியாவில் பிறந்தவர். மேலும் இவர் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஜித் பானர்ஜிக்கு பரிசுத் தொகையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு கிடைக்குமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.