1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (10:05 IST)

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்!

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டபம் அறிவித்துள்ளது 
 
இதன்படி ராமேஸ்வரம் - மண்டபம்  இடையே ஜூலை 14ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திற்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
அதேபோல் திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது