நம்மால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராம இருக்க ... விஜய் ஆண்டனி அட்வைஸ்!!

vijay antony
Sinoj| Last Updated: வியாழன், 2 ஏப்ரல் 2020 (21:38 IST)

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,
மூணுக்கு ராக்கெட் விட்டோம். செவ்வாய் கிரகத்தில் சென்று வாழலாம்ன்னு நினைச்சோம். மனிதன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். மனிதனுக்கு அவ்வளவு சக்தி உண்டு அப்டீனு நினைத்தோம். ஒரு வைரஸ் உலகம் முழுவதும் இப்படி ஒரு பிரச்சனையை உண்டுபண்ணி நம்மள வீட்டுல உக்கார வைக்குமுண்னு யாரும் நினைச்சு பாக்கல. இந்த சமயத்துல நாம செய்ய வேண்டியது அமைதியா வெளிய எங்கயும் போகாமல். அரசு சொல்வதை கேட்டு நம்மால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராமல் மற்றவர்கள் பிரச்சனை நமக்கு வராமல் குடும்பத்துடன் டைம் செலவு செய்யனும் . இந்த வைரஸால் , பலர் சாப்பிடமுடியாமல் கஷ்டப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்வோம். தேவையில்லாத பொருள் இருந்தால் அதை ரோட்டில் ஒரத்தில் வைச்சிட்டு போங்க.. ஏழைகள் அதை எடுத்துக்கொள்வார்கள். கடைகளில் 1 மீட் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் . தனது குடும்பத்தை மறந்து டாக்டர்கள், செவிலியர்கள்,போலிஸார் நம்மைக் காப்பாற்ற பணிபுரிகிறார்கள் அவர்களுடைய வலியை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :