இதுல கூடவா மோசடி ? பிரதமர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர் !!
சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வரையில் இந்திய அரசு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மோடி நிதி உதவு வழங்கலாம் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சில மோசடி ஆசாமிகள் கொரோனா தடுப்பு நிதி பெயரில் சில போலிக்கணக்குகளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும். இப்படியான ஒரு போலிக்கணக்கை புவனேஷ்வர் என்பவர் உருவாக்கியுள்ளதாக புலனாய்வுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அந்த நபரை தேடி வருகின்றனர்.