1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (18:04 IST)

உடல்நலக்குறைவால் சசிகலா விடுதலையாவதில் சிக்கலா? வழக்கறிஞர் விளக்கம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகப் போவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து அவரது விடுதலையை அவரது ஆதரவாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். சசிகலா விடுதலை ஆனவுடன் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றும் அதிமுகவை அவர் கைப்பற்றுவார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சசிகலா விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார் 
 
மூச்சுத்திணறல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைவு காரணமாக தற்போது சசிகலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்