முககவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை – தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம்

petrol
Today Petrol Price
Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:12 IST)


கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது.எனவே முககவசம் அணிந்துவராவிட்டால் பெட்ரோல் கிடையாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவில் இந்த்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இன்று கொரோனா தடுப்பு அனைத்து மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கொரோனா முதல் அலையைக் கடந்துவிட்டோம். இரண்டாம் அலையை எதிர்த்துப் போராட வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகிவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10 அம் தேதி முதல் முககவசம் அணிந்துவருபவர்களுக்கு மட்டும்தன் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் கிடைகும் எனத் தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :