புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (09:09 IST)

ரெட் அலர்ட் எதிரொலி: தனுஷ்கோடியில் சுற்றுலாபயணிகள் அனுமதி மறுப்பு

அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசு தகுந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்புப்பணிக்கு தயாராக இருக்கின்றது.

இந்த நிலையில் "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் 9ம் தேதி வரை தனுஷ்கோடிக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் தனுஷ்கோடியை பார்க்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகா தொடர் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.