பரோல் நீட்டிப்பு இல்லை: சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு முதலில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கனக்கில் கொண்டு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு தமிழக முதல்வரிடம் விண்ணப்பித்திருந்தார். இன்றுடன் பேரறிவாளனின் பரோல் முடிவதை அடுத்து பரோல் நீட்டிப்பு குறித்து தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை
இதனையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு பேரறிவாளன் புறப்பட்டுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன