புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (18:01 IST)

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ஆருஷி பெற்றோர் விடுதலை

ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர்களை சமீபத்தில் அலகபாத் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது.



 
 
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜெயில் அதிகாரிகளின் வழக்கமான நடைமுறைகள் காரணமாக ஆருஷியின் பெற்றோர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் சற்றுமுன்னர்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் காசியாபாத் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். சிறையில் இருந்து இருவரும் வெளியே வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.