1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (19:37 IST)

திமுக ஆட்சியில் எல்லாமே டூப்ளிகேட் தான், எதுவுமே ஒரிஜினல் இல்லை: ஈபிஎஸ்

edappadi
திமுக ஆட்சியில் எல்லாமே டுப்ளிகேட் தான் என்றும் எதுவுமே ஒரிஜினல் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
 
சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் திமுக ஆட்சி திறந்து வைக்கிறது என்றும் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாத ஒரே ஆட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார் 
 
திமுக ஆட்சியில் எல்லாமே டூப்ளிகேட் தான் என்றும் எதுவும் ஒரிஜினல் இல்லை என்றும் திமுக கட்சியும் ஆட்சியும் ஒரிஜினல் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 
 
கொலை கொள்ளை திருட்டு நடைபெற்று வருவதால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை நான் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்