1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (12:46 IST)

ஜூன் 14ஆம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை அறிவிப்பு

admk
ஜூன் 14 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 
 
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை 14ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இந்த கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.