வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (16:14 IST)

இனி மொட்டைக்கு காசு இல்லை – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இனிமேல் மொட்டையடிக்க காசு இல்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக் காணிக்கைக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், பக்தர்கள் மொட்டையடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.