1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:13 IST)

’வலிமை’ வந்தால் சிமெண்ட் விலை குறையும்: அமைச்சர் தகவல்

’வலிமை’ வந்தால் சிமெண்ட் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார் 
 
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சிமெண்ட் விலை அதிகரித்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிமெண்ட் விலை எப்போது குறையும் என்றும் பாமக உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார் 
 
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஜூன் மாதத்தில் 490 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை தற்போது 420 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் அது மட்டுமின்றி அரசு டான்செம் நிறுவனம் மூலம் வலிமை சிமெண்ட் வர உள்ளதாகவும் அந்த சிமெண்ட் சந்தைக்கு வரும்போது சிமெண்ட் விலை மேலும் குறையும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
அஜித் நடித்த படம் வலிமை என்ற டைட்டிலில் புதிய சிமெண்ட் ஒன்று உற்பத்தி செய்யப் போவதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது