1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:10 IST)

மெரீனாவை அழகுபடுத்த ரூ.20 கோடி: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்!

சென்னை மெரினா கடற்கரை சென்னை மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான சுற்றுலா தளம் என்பது தெரிந்ததே. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்தாலும் தாங்கக்கூடிய அளவுக்கு அழகிய கடற்கரையாக இது என்பதும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையின் அழகை சென்னை மெரினா கடற்கரை என்ற நிலையில் அதனை மேலும் அழகூட்ட ரூபாய் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
 
சட்டசபையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சென்னை மெரினா கடற்கரையை ரூபாய் 10 கோடி செலவில் அழகுபடுத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார் 
 
சென்னை மெரினா உலக தரத்தில் உயர்த்தப்பட உள்ளதை அடுத்து சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளனர்