1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (10:47 IST)

தொலைக்காட்சி படப்பிடிப்பில் கொரோனா! – ஒருவர் பலி!

கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் நடித்தவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல மாநிலங்கள் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி படப்பிடிப்பில் நடித்த நடிகை நவ்யா சாமி மற்றும் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி தொடரான ’பாஹர்வாடி’ படப்பிடிப்பில் நடிகர், நடிகையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில் படப்பிடிப்பில் பணிபுரிந்த டெய்லர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அவர் சமீபத்தில் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த படப்பிடிப்பில் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.