1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (12:18 IST)

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் மத்திய அரசை வலியுறுத்தி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களையும் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்

 
  • தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வினை மத்திய அரசு பாரபட்சமில்லாமல் வழங்க வலியுறுத்தல்
  • மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்
  • திருவள்ளுவர் எழுதிய உலகப்பொதுமறை திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
  • மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை கைவிட வேண்டும்
  • கல்விடை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

இதுதவிர, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரிவிதிப்பு, பார்முலா 4, பேனா நினைவு சின்னம் என பணத்தை விரயம் செய்தல் என அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K