ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (08:47 IST)

இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடபுடலாக தயாராகும் விருந்து உணவு..!

admk office
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளதை அடுத்து, தடபுடலாக தொண்டர்களுக்கு விருந்துகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் அதிமுக தொண்டர்கள் 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட சில முக்கிய ஆலோசனைகள் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என்றும் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வழக்கம் போல், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கூட்டணி அமைப்பதற்கான அங்கீகாரம் அளிப்பது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்காக சைவ, அசைவ உணவுகள் தடபுடலாக தயாராகி வருகிறது.


Edited by Siva