நான்கு நாட்களாக ஒரே விலை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசலுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன \
இதனை அடுத்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 102.49 என்ற விலையிலும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 94.39 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது