வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (16:40 IST)

தினகரனுக்கு அழைப்பு இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த போது தன் கட்டுப்பாட்டுக்குள் உறுப்பினர்களையும் கட்சியையும் வைத்திருந்தார்.
அவர் காலமான பிறகு கட்சிகள் பலவாறாக பிரிந்தது. இதில் முக்கியமாக டி.டி.வி.தினகரன் முதல்வர் பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆகாதவராகவே மாறிவிட்டார்.

இதனால் அதிமுகவின் பிரதான எதிரியான தினகரன் அதிமுகவினரின் பலம், பலவீனம் போன்ற குட்டுகளை எல்லாம் புட்டு புட்டு வைப்பதால் சோற்றில் மறைத்து வைத்த முழு பூசணிகாய் வெளியே தெரிவது மாதிரி  தங்கள் தரப்பு பகையை வார்த்தைகள் மூலம் கொட்டி வருகின்றனர்.
 
நாகரிகமாக பேச வேண்டிய இடத்தில் கருணாஸ் போன்றவர்கள் அவதூறு பரப்பி முதல்வரையே சீண்டும் விதத்தில் பேசிவருகின்றனர்.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு முதல்வர் பழனிசாமி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என்றார்.
 
அதையே வைத்தியலிங்கமும் கூறினார்.
 
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
 
அதிமுக நிர்வாகிகள் பாதை தவறி சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வர வேண்டும். இதில் முக்கியமாக டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை இவ்வாறு அவர்  தெரித்துள்ளார்.