வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதில் கிடைக்கக்கூடிய பப்பாளியில் உள்ள மருத்துவ குணங்கள்...!

பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய  பங்கை வகிக்கிறது.
எளிதில் கிடக்கக்கூடிய பப்பாளி கல்லீரலை பலப்படுத்துவதோடு, நோயை தடுக்கும் மருந்தாக அமைகிறது.
 
பப்பாளியில் உள்ள வேதிப்பொருள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தனமை கொண்டது. வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தாயாரிக்கலாம்.
 
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
 
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி  வர புண்கள் ஆறும்.
 
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச  வலி, விஷம் இறங்கும்.
 
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.