1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (16:39 IST)

மேல்முறையீடு இல்லை: தேர்தலுக்கு ரெடி; தினகரன் திடீர் பல்டி!!!

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக தினகரன் கூறிவந்த நிலையில் அவர் தற்பொழுது திடீரென மேல்முறையீடு செய்யப்போவதில்லை என கூறியுள்ளார்.
 
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 
 
இதனையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அக்டோபர் 30ந் தேதி மேல்முறையீடு செய்யப்போவதாக தினகரன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே சபாநாயகரும், அதிமுக கொறடாவும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் தினகரன் தரப்பினர் நேற்றைய தினம் மேல்முறையீடு செய்யவில்லை.
 
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும் தேர்தலை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளோடு  காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளிலும் அமமுக அபாரமாக வெற்றி பெறும் என்றும் இத்தேர்தலில் அதிமுக டெபாஸிட் பெறுவதே கஷ்டம் என்றும் தினகரன் தெரிவித்தார். தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.