வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:32 IST)

தினகரன் ஒரு மண் குதிரை - ஜெயக்குமார் பேட்டி

டிடிவி தினகரனை தாக்கி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.  
 
திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் “ சசிகலா குடும்பத்தை தவிர மற்றவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக அமையட்டும்.. மறப்போம்.. மன்னிப்போம்.. என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.  டிடிவி தினகரன் ஒரு மண்குதிரை அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.  அதிமுகவில் தினகரனுக்கு இடமில்லை” என அவர் தெரிவித்தார்.