பேனரை கிழித்து ரகளை: கண்டும் காணாமல் போன தினகரன்

Last Modified செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:16 IST)
அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் இன்று முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் மரியாதை செலுத்த சென்ற போது பேனர்கள், கொடிகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அக்டோபர் 30 ஆம் தேதி இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா. இந்நிகழ்ச்சி தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
 
விழாவையொட்டி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர். துணை முதலவர், மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்னன்ஆகியோர் மரியாதை செலுத்தினர். 
 
இதே போல் தினகரனும் மரியதை செலுத்த வந்திருந்தார். அவருடன் அமமுக தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர். அப்போது தேவர் நினைவிடம் அருகே அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.
 
தினகரன் முன்னிலையிலேயே அதிமுக பேனர்கள் மற்றும் கொடிகளை அமமுகவினர் சேதப்படுத்தினர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். ஆனால், இது குறித்து தினகரன் எதுவும் தெரிவிக்கவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :