காசி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தீர்மானம்
நாகர்கோவில் காசி என்ற இளைஞன் பல பெண்களை சீரழித்து அவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு பெண் டாக்டர் உள்பட பலர் காசியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் என்பவர் அறிவித்துள்ளார். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் இதனை ஒரு தீர்மானம் ஆகவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் காசி வழக்கில் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். காசி வழக்கில் இதுவரை நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆஜரான நிலையில் தற்போது இந்த வழக்கில் இருந்து வெளியேறி விடுவார் என்று கூறப்படுகின்றது