Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டி போட காத்திருக்கும் நிவர் புயல்; அவசர எண்கள் அறிவிப்பு

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:45 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற உள்ள நிலையில் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிவர் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அவசர உதவிகளுக்கு மாநில அளவிலான உதவி எண் 1070, மாவட்ட அளவிலான உதவி எண் 1077 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிவர் புயலால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 ஆகிய அவசர எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் புயல் கரையை கடந்து விட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சவுக்கு சங்கரின் மகன் தற்கொலையா?.... நெட்டிசன்கள் ஷாக்!...

Old Monk, Royal Challenger மதுபானங்களுக்கு தடை!.. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி.

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments