1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (19:30 IST)

நதியை தடுத்து நிறுத்தினாலும் கவலை இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உறவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா துண்டித்து வருகிறது. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி கிட்டத்தட்ட நின்றேவிட்டது. மேலும் பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் உபரி நீரை யமுனை நதியுடன் இணைக்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த தண்ணீரை ஜம்மு காஷ்மீர் பக்கம் திருப்பி அம்மாநில மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிந்து நதிநீரின் பாகிஸ்தானுக்கான ஆணையர் சயத் மெஹர் அலி ஷா கூறியபோது, 'தங்கள் நாட்டை நோக்கி பாயும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தினால் கவலைப்பட மாட்டோம் என்றும், 1960ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கிழக்குநோக்கி பாயும் நதிகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்த நதிநீரை பயன்படுத்தினாலும் சரி அல்லது திருப்பிவிட்டாலும் சரி தங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
சிந்து நதிநீரின் பாகிஸ்தானுக்கான ஆணையர் சயத் மெஹர் அலி ஷா இவ்வாறு கூறியிருந்தாலும் இந்த நீரை பயன்படுத்தி வரும் பாகிஸ்தான் மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது