வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம்!
நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இந்திய மாநிலங்களின் கல்வி, கட்டமைப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கிடும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு பல்வேறு வகையிலும் வளர்ச்சி குறியீடு உள்ள மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சமூக முன்னேற்றம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி வலுவாக உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
மேலும் நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ஆம், அதில் 3 வது ஆண்டாக வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் 86 மதிப்பெண்களை பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் கேரளா, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.