செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (15:17 IST)

தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுப்பு தர வேண்டும்! – தமிழக அரசு உத்தரவு!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலில் வாக்குகளை செலுத்த தேவையான பூத் ஸ்லிப்புகளை வீடுகளிலேயே மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தேர்தல் நாளான பிப்ரவரி 19 அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் பிடித்தம் செய்யாமல் விடுப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி சம்பள குறைப்பு, சம்பள பிடித்தம் செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.