புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 பிப்ரவரி 2020 (17:02 IST)

அதிகாரிகளுக்கும் அல்வா; மக்களுக்கும் அல்வா – பட்ஜெட்டை கேலி செய்த கமல் !

2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை கமல் கேலி செய்துள்ளார்.

இந்த நடப்பு ஆண்டுககான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனனிடம் பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட போது ‘வழக்கமாக பட்ஜெட்டுக்கு முன்னால் அதிகாரிகளுக்கு அல்வா கொடுக்கப்படும். அதெ போல மக்களுக்கும் அல்வா கொடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நீண்ட உரை ஆற்றினாலும் மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ என நக்கலாக தெரிவித்துள்ளார்.