வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2024 (15:31 IST)

அமிதாப் முதல் அம்பானி வரை: ராமர் கோவில் விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய பிரபலங்கள்!

ramar temple
அயோத்தியில் ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த கோவில் திறப்பு விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரை உலகினர், அரசியல்வாதிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பிறகு பிரதிநிதிகள் ராமர் கோயில் திறப்பு விழா வருகை தந்து இருக்கின்றனர்.  அந்த வகையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்ப்போம். 
 
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், அல்லு அர்ஜுன், மோகன்லால், அனுபம் கெர், சிரஞ்சீவி, பாடலாசிரியர் மனோஜ் முன்டாஷிர் மற்றும் அவரது மனைவி, பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளரான‌ பிரசூன் ஜோஷி, இயக்குநர்கள் சஞ்சய் பன்சாலி மற்றும் சந்திரபிரகாஷ் திவேதி ஆகியோரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தரவுள்ளனர்.
 
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அவரது மனைவி நிர்ஜா, பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல், ஆனந்த் மஹிந்திரா, டி.சி.எம் ஸ்ரீராமின் அஜய் ஸ்ரீராம், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, முன்னாள் தூதரக அதிகாரி அமர் சின்ஹா, முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோத்தகி, இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் பராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்,.
 
மேலும் ரஜினிகாந்த், தனுஷ், ராம்சரண் தேஜா, சதீஷ், மோகன்லால், தெண்டுல்கர், விராட் கோஹ்லி உள்ளிட்ட பலரும் வருகை தரவுள்ளனர்,
 
 
Edited by Siva