வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:33 IST)

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

கடன் தொல்லை காரணமாக கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவையின் வடவள்ளி என்ற பகுதியில் ராஜேஷ், லக்ஷயா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் என்பதும் இவர்களுக்கு யக்சிதா என்ற குழந்தையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜேஷ் இன் அம்மா பிரேமா என்பவரும் இவர்களுடனே வாழ்ந்து கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்திற்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டதை அடுத்து கடன்காரர்கள் நெருக்கியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
 
 ராஜேஷ் தூக்கில் தொங்கியும் அவரது மனைவி லக்ஷயா, மகள் யக்சிதா தாயார் பிரேமா ஆகியோர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாகவும் கடன் காரர்கள் நெருல்கியதால்தான் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது 
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva