ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (17:54 IST)

எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடி ஒதுக்கீடு..தமிழ்நாடு அரசு அரசாணை

TN assembly
2023-24 நிதியாண்டுக்கான  எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது 
 
இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இனி தொகுதி மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran