வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 மே 2023 (12:30 IST)

20 ஆதீனங்களுக்கு அழைப்பு, தேவாரம் பாடி செங்கோல் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்..!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்திறப்பு விழாவுக்கு 20 தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது தமிழக ஆளுநர் ரவி, புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்பட பலர் இருந்தன. 
 
இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன் பேசிய போது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டிலிருந்து 20 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோலை தயாரித்த ஆதினங்களை பிரதமர் மோடி கௌரவிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் தேவாரம் பதிகம் பாடி செங்கோல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வு எது என்றும் செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகளை நான் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு தங்களது முடிவை மறு பரிசினை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran