திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (20:51 IST)

இது முழுக்க சந்தர்ப்பவாத பட்ஜெட் : முதலமைச்சர் விமர்சனம்!

Mamtha
இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத பட்ஜெட் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்றைய பட்ஜெட்டை பாஜகவினர் புகழ்ந்தும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 
 
இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட் குறித்து கூறியபோது இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத பட்ஜெட் என்றும் பணவீக்கம் விண்ணை தொடும் நிலையில் வருமான வரியை விலக்கினால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் பட்ஜெட்டில் வேலை இல்லாதவர்களுக்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பட்ஜெட் மிடில் கிளாஸ் நபர்களுக்கு நஷ்டத்தை வரக்கூடிய பட்ஜெட் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
 
Edited by Siva