1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (07:12 IST)

கனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தேனி, கோவை, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் ஒருசில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
 
இந்த நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று அறிவித்திருந்தார் 
 
நீலகிரியை அடுத்து இன்று ராமநாதபுரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் சென்னையில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது