ஓலா நிறுவனத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு
எலக்ட்ரிக் கார் விற்பனையின் முன்னணியில் உள்ள ஓலா அடுத்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பெட்ரோல்- டீசல் விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இதற்கு மாற்று வழியை பற்றி ஒவ்வொரு நிறுவனமும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், டாடா, ஹூண்டாய், டெஸ்லா, ஓலா போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரில் வாகங்களை உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த நிலையில், முன்னணி எலக்ட்ரிக் நிறுவனமான ஓலா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ., தூரம் வரை செல்லும் கர்களை 2024 ஆம் ஆண்டில் தயாரிக்கவுள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.
இந்த வாகனம் 4 வினாடிகளில் 60 கிமீ., வேகத்தை எட்டும் எனவும், நவீன வசதிகள் கொண்டதாக இந்தக் கார் இருக்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது