வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:18 IST)

புது வருடத்திற்குள் நுழைந்தது நியூஸிலாந்து! – மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

நாளை புது வருடம் தொடங்க உள்ள நிலையில் நியூஸிலாந்து புது வருடத்திற்குள் முதல் நாடாக நுழைந்துள்ளது.

நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் அதை கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கோலாகலமாக காத்துள்ளனர். பல நாடுகளில் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது புது வருடத்திற்குள் முதல் நாடாக நியூஸிலாந்து நுழைந்துள்ளது. அதனுடன் க்ரிமாதி, சாத்தம் தீவுகளும் புது வருடத்திற்குள் நுழைந்துள்ளன. நியூஸிலாந்தின் ஆக்லேண்டில் பட்டாசுகள் வெடித்தும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்தும் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.