திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (12:10 IST)

இளமை இதோ.. இதோ.. இது எப்படி இருக்கு! – வைரலாகும் இளையராஜா புத்தாண்டு வாழ்த்து!

நாளை புது வருடம் தொடங்க உள்ள நிலையில் ரசிகர்களுக்காக இளையராஜா பாடிய புத்தாண்டு பாடல் வைரலாகியுள்ளது.

புத்தாண்டு என்றாலே மக்கள் பல்வேறு வகைகளிலும் கொண்டாடி வந்தாலும், அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் மறக்காமல் ஒலிக்கும் பாடம் சகலகலாவல்லவன் படத்தில் வரும் “இளமை இதோ இதோ” பாடல். இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார். இந்த பாடல் பல ஆண்டுகளாக தமிழர்களின் புத்தாண்டு பாடலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ பாடலை பாடி தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இளையராஜா ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.