திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:15 IST)

புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்

இன்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31-ஆம் தேதி அதாவது இன்று இரவு 7 மணி முதல்  மெரினா கடற்கரை சாலை தடுப்புகள் வைத்து அடைக்கப்படும் என்றும் வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும் காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரிஸ் கார்னரில்  இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காமராஜா் சாலை காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva