புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (15:05 IST)

வீட்டுத்தனிமை - மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு

மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதித்தோர் வீட்டுத்தனிமையில் இருக்கும் புதிய விதிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 
கொரோனாவால் வீட்டுதனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7 வது நாளில் தனிமைக்காலம் நிறைவடையும். அதாவது தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7 வது நாளில் மறு பரிசோதனையின்றி வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம். 
 
ஆனால் மூச்சு விடுதல் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். அதோடு 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  தொடர்ந்து மாஸ்க் அணிதல், தனி மனித இடைவேளை, கூட்டம் பொது இடங்களில் அதிகம் கூடுவது போன்றவற்றை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.