1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (16:32 IST)

வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு –புதிய விதி

வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படிக்க தகுதிச்சான்று பெற குறைந்தபட்ச மதிப்பெண்  80 சதவீதம் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழநாட்டைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவர் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் மருத்துவப் பயிற்சி பெற பதிவு சான்றிதழ் வேண்டி மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பத்திருந்தார். மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பான விசாரணையில் தாமரைக்கண்ணனின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார். மேலும் வெளிநாடுகளில் மருத்துவ கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதிச் சன்றிதழுக்கான வரையறைகள் என்ன என்பதும் குறித்தும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்குப் பதிலளித்த இந்திய மருத்துவக் கவுன்சில் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களில் 50 சதவிகிதம் பெற்ற மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப் படுவதாகக் கூறியது.

இதைக் கேட்ட உயர்நீதிமன்றம் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே உள்நாட்டில் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் வெளிநாடுகளில் படிக்க விரும்புவோர்க்கு குறைந்தபட்ச தகுதியாக 80 சதவீதமாக உயர்த்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.