வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:34 IST)

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல் !

கொரோனா அலையின் தாக்கல் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளுக்கு புதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில், டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே  6 அடி தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வந்தால்தான் மதுபானங்கள் விற்க வேண்டுமென ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானக் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது .

நாளை முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே திறப்பு  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.