வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (12:35 IST)

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7  பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரன தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இது தொடர்பான ஆணை ஒன்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இது குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம். இதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.

அதேப் போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆளுநர் அதுகுறித்த எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.

அதனால் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சிகள் 10ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் நிகழ்ச்சியை நடத்தினர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஆளுநரைத் தனியாக சந்தித்து தன் மகன் பேரறிவாளன் உள்பட எழுவரையும் விரைந்து விடுதலை செய்ய வேண்டுமென மனு ஒன்றைக் கொடுத்தார்.

தற்போது ராஜீவ் காந்தி கொலையின் போது அவருடன் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஏழு பேரையும் விடுதலை செய்ய்க்கூடாது என எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக முன்பே ஆளுநரை சந்த்தித்து மனு ஒன்றைக் கொடுத்த அவரகள், தற்போது ஏழு பேர் விடுத்லைக்கு எதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் ஏழுபேர் விடுதலையில் ஏதேனும் தாமதமோ அல்லது தடையோ ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.