ஏ.டி.எம் மிஷன்களில் ரூ.2000 நோட்டுகள் எப்போது கிடைக்கும்?
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர். தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை அடுத்து வங்ககளில் இன்று கூட்டம் அலைமோதியது. பலர் புதிய ரூபார் நோட்டுகளை வாங்க ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் வங்கியில் ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது புதிய 2000 ரூபாய் தாள் இரண்டு வழங்கப்பட்டது.
ஆனாலும் சில வங்கி ஏ.டி.எம்.களில் புதிய 2000 ரூபாய் தாள்களை நாளை முதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
