செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (15:46 IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் –பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் –பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
கடலோரப் பிரச்சனையால் கைது செய்யப்படுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த அக்டோபர் 1-ந்தேதி எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறப்பட்டு ஈரான் கடற்படையால் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஐந்து பேர் துபாயில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

தற்போது தமிழக மீனவர்களை விடுவிக்கும் பொருட்டு எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது ’கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் கைதாகியிருக்கும் மீனவர்களுக்கு அங்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஆவன செய்ய டெக்ரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.