வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:10 IST)

குழந்தைகளுக்கு குத்திய அலகு : காட்டுமிராண்டித்தனம் என பொங்கும் நெட்டிசன்கள்

சென்னையில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் இரு குழந்தைகளுக்கு அலகு குத்தி வெளியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.

 
தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகள், அபிஷேங்கள் என செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இரு குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்ட நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வலி தாங்க முடியாமல் அந்த குழந்தைகள் அழுவதால் அந்த புகைப்படத்தை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்து அக்குழந்தையின் பெற்றோருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
ரமேஷ் என்பவர் தன்னுடைய முகநூலில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இன்று சென்னை புளியந்தோப்பு ஸ்ரீ முண்டகன்னியம்மன் கோவிலில் எங்கள் செல்வங்களுக்கு பழம் குத்தப்பட்டது” என அவர் குறிப்பிட்டிருந்தார். பலரும் கண்டனம் தெரிவிக்க அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். அவர்தான் அக்குழந்தைகளின் தந்தை எனத் தெரிகிறது.