ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (08:57 IST)

10 ரூபாயை தொலைத்ததால் குழந்தைகள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய தந்தை

உத்திரபிரதேசத்தில் பத்து ரூபாய் தொலைத்ததால், மூன்று குழந்தைகளை அவர்களது தந்தையே மின்கம்பியில் கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் ஜலால் நகரைச் சேர்ந்தவர் இஸ்லாம். இவருக்கு இக்ரா என்ற மகளும், ரெஹான், அயான் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
 
இஸ்லாம் தனது மூன்று குழந்தைகளிடம் 10 ரூபாய் கொடுத்து பொருட்களை வாங்கும்படி சந்தைக்கு அனுப்பியுள்ளார். சந்தைக்கு சென்ற குழந்தைகள் அந்த 10 ரூபாயை எங்கோ தொலைத்து விட்டனர். வீட்டிற்கு சென்றால் அப்பா திட்டுவார் என பயந்து காசை தேடிக்கொண்டிருந்தனர் குழந்தைகள்.
 
பிள்ளைகள் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அஸ்லாம் சந்தைக்கு சென்றுள்ளார். பிள்ளைகள் காசு தொலைந்து போனதை தந்தையிடம் கூறியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாம் தன் மூன்று குழந்தைகளையும் மின் கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டு, கொடூரமாக அடித்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டனர்.
 
இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அஸ்லாமுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.